Enrum Anbulla Nanban Dilip

சினிமா சினிமா

Posted in funny, movie by Dilip Prakash on நவம்பர் 29, 2008

இந்த பதிவுக்கு காரணம் அடலேறு அய்யா

1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நான் இரண்டாவது படிக்கும் போது…
ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? அஞ்சலி அர்ச்சனா திரையரங்கு, கோவை
இ. என்ன உணர்ந்தீர்கள்? தனிமையை, பயத்தை ( என்னை முன் வரிசையில் அமர்த்தி, Parents அவர்கள் பின் வரிசையில் அமர்ந்து படம் பார்த்தார்கள்)

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? குசேலன் ( சத்யம் ‍theatre ல்… ஆபிஸ் உபயத்தில்…) கடைசி அரை மணி நேரம் வந்து படத்தை பார்த்திருக்கலாம் என்று தோன்றியது

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சென்னை 600028 (Original CD), என்னுடைய மடிக்கணணியில். .கவித கவித அதான் தோணிச்சு .. முதன் முறையா இந்த படத்தை பார்க்க Black ல் 150 (first and last time) கொடுத்து பார்த்து ரொம்பவே enjoy பண்ணி பார்த்த படம்.. நான், சிவரஞ்சனி, ஷாலினி, நித்தி எல்லாம் சேர்ந்து பார்த்த கடைசி படம்.. இப்ப எல்லாரும் தனி குடித்தனம் போயிட்டாங்க பா..

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா? அன்பே சிவம் . இன்னைக்கு வரைக்கும் என்ன நிறைய யோசிக்க வைக்கற படம்….

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்? தெரியல
ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்? இது வரைக்கும் அப்படி ஏதாவது சொல்ற மாதிரி நான் பார்த்தில்லை

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா? எந்த book கிடைச்சாலும் முதல்ல படிக்கறது தமிழ் சினிமா கிசுகிசு .. ஆனா அவங்களும் மனிஷங்க தானே.. தப்பா இருக்கிறது தப்பு இல்ல… அதை தப்பாவே பார்க்கறது தான் தப்பு.. என்ன நான் சொல்றது சரியா?

7.தமிழ்ச்சினிமா இசை? இப்ப வர்ற பாட்டை ரெண்டு மாசம் கழிச்சு கேக்க முடியுமான்னு தெரியல.. ஆனா 20 வருசத்துக்கு முன்னாடி இளையராஜா போட்ட மெட்டு கேட்டா , மனசுக்கு அமைதியா இருக்கு, தூக்கம் நல்லா வருது

. 8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறையவே.. 1. The Postmen.. – எங்க அப்பாவை நான் மதிக்க ஆரம்பச்சது இந்த படத்தை பார்த்திலிருந்து தான்.. நிறைய இடத்தில அடக்க முடியாம அழுகை வந்தது

2. Spring ,Summer, Fall,Winter and Spring..
சொல்றதுக்கு எதும் இல்ல.. நீங்களே பாருங்க…

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

அப்படி எதும் இல்லப்பா…

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் தான் இருக்காதுன்னு தோணுது.. மத்தபடி tamil சினிமா இருக்கும்….

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நாடு கொஞ்சம் உருப்படும்ன்னு நினைக்கிறேன்…

இந்த ஆட்டத்தோட விதிமுறைப்படி 5 பேர அழைக்கணுமா … அப்பறம் அழைக்கிறேனே…

Tagged with: ,

Saranya

Posted in celebrities, movie by Dilip Prakash on செப்டம்பர் 22, 2008