*தமிழின் கதறல்*
———————————————————————————–
இதை நான் எழுதவில்லை.. ஆனாலும் இதை பதிவாக போடுவதில் பெருமை அடைகிறேன்…
———————————————————————————–
தமிழீழம் எனும்.. தமிழனே…. நான் “தமிழ்” பேசுகிறேன்
*தமிழின் கதறல்*
என்.. தமிழனே…. நான் “தமிழ்” பேசுகிறேன்
“அம்மா” என்று அழைக்கும் சுகம்…
“மம்மி” என்றால் கிடைத்துவிடுமோ ??
“மன்னிக்கவும்” என்னும் மெல்லிய மொழியைவிட.
“சாரி” என்பது சரியாகவா உள்ளது ??
“வணக்கம்” என்னும் வண்ண வார்தையை விட
“ஹலோ” என்பது அத்தனை அழகா ?
“நன்றி” என்னும் நயமான பதத்தை விட
“தாங்க்ஸ்” என்பது தரமானா சொல்லா ??
தமிழனே !!!!
நீ அயலானின் ஆங்கில மொழியை “மதிக்க ” வேண்டாம் என்று கூறவில்லை..
உன் தாய்மொழியான தமிழை
“மிதிக்க” வேண்டாமே !!
…………………………….
தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய் மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ
…
தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழ்ப் பற்று போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ
…
நம்
மூச்சிலும் காற்றிலும்
கன்னித்தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ
நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துகள்
வற்றாது ஓடுதல் கூடாதோ
…..
வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா
———————————————————————————–
இதை நான் எழுதவில்லை.. ஆனாலும் இதை பதிவாக போடுவதில் பெருமை அடைகிறேன்…
———————————————————————————–
leave a comment