Software song
என் இனிய தமிழ் மக்களே….
உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில் வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா…
நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம்,
இந்த படைபிற்க்காக
சுட்டது: பருத்தி வீரன் பாடலை
சுடாதது: ஆந்த பாடல் வரிகளை
Start Music……
Team members:
ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera
நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera
Team members:
கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல
கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல
மாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல
மாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல
PM:
நிறுத்துங்கடி, ஏ நிறுத்துங்கடி, நிறுத்துங்கிறேன்ல Codeஅடிங்கடின்னா என்னா நக்கலா
ஏய் Fresher நீ இங்க வா, டேய் associate நீ இங்க வா, எல்லாம் வரிசையா நில்லு
நல்லா keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்ன
Team member:
யோவ் இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு delivery கிடையாது ஆமா
PM:
இங்க பார்யா கோவத்த, டேய் T L அட்ரா
TL:
நாடரிஜ்ச fresherகளா நீங்க எங்க சோடி,
உங்கள வச்சுக்கவா projectula சொல்லிப்புடுங்கடி
C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
ஓன்ன quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா
ஓன்ன quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா
PM:
Codenna இப்படிதான் குத்தனும், என்ன புரிஞ்சுதா
Programmer:
Design correctல்லாத ப்ரொஜெக்ட்குள்ள,
இப்போரவுசு பன்னும் PM தம்பி
நைட்டெல்லாம் codeaa குத்தி,
எனக்கு கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா,
கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா
PM:
அட, ராவெல்லாம் codeaa குத்தி,
உனக்கு கைய்யி ரெண்டும் நொந்தாலென்ன
இந்த experienceஉல்ல PMகிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடி
Programmer:
experienceஉள்ள PMகிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல
பாசங்கு பண்ணுரெண்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா,
நீயும் அறிவுகெட்டு பேசாதடா
Tester:
அடி bodyமேல bodyவச்சி bodyக்குள்ள HTLML codeவச்சி
TL:
அட, அப்படி போடு SAppu (Senior Associate )
Tester:
ஓட்டி ஓட்டி பாத்தாலும் என் Browser கிளியுதடா
அஹா அஹா அஹா….
ஓட்ட Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது
ஓட்ட Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது
Test Lead:
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு துக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய்….
பொசகெட்ட பயேல ஒனக்கு test director கேக்குதடா
Test Manager:
QCஈல (QC = Quality Centre)…
ஆமோய் ஆமோய் ஆமோய்…
QCஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி..
QCஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி
நான் test planaai போட்டு வச்சென் MPPயில (MPP = Microsoft Project plan)
நான் test planaai போட்டு வச்சென் MPPயில
ஆனா milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல
ஆனா milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல
Designer:
Riskகுள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு
Riskகுள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு
சப்பையான design changeuக்கு changeaa விடாம
சப்பையான design changeuக்கு changeaa விடாம
ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
TL:
அடி யாயி… ஆஹா ஆஹா ஆஹா
ELT: (Entry Level Trainee)
அள்ளி MPPயில estimateaa தூக்கி பொட்டு
அள்ளி MPPயில estimateaa தூக்கி பொட்டு
புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
இப்பொ புலம்பினாக்க உங்கல நாங்க நம்பமுடியல
PM:
போடா போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலேபோடா
போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலே
ELT batch சின்ன பய என்னென்னமோ பேசுரானே
designerkku எனக்கும் சண்டை, இப்போ உடைய போகுது மண்டை
அட designerkku எனக்கும் சண்டை, இப்போ உடையப்போகுது மண்டை
PM & TL: என்ன fresherங்கலா keyboarda கையில வச்சிகிட்டு தலைய சொரிஞ்சிக்கிட்டு நிக்கறீங்க, codeaa நீங்க அடிக்கறீங்கலா இல்ல நாங்க அடிக்கவா.
இப்படிக்கு என்றும் பால்முகம் மாரா…உங்கள் சுட்டிப்பய புள்ள
Namma Raasa.. Oru kathai
கொஞ்சம் ஒல்லியா.., கொஞ்சமில்ல
ரொம்பவே.. ஒல்லியா, கிட்டத்தட்ட
ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி,
எலும்பும் தோலுமா இருப்பானே,
நம்ம நடேசன், அவன்பாட்டுக்கு
தனியா பஸ்ஸ்டான்டுல
நின்னுகிட்டிருந்தானுங்க.
பஸ்ஸ்டாண்ட்ல எதுக்கு
நிப்பாங்க? எல்லாம்
பஸ்ஸுக்காகத்தான்!.நடேசனுக்கு
அப்படி இப்படி, ஒரு
பொண்ணுக்குகாகவெல்லாம்
காத்திட்டுருக்கிற ஆளில்லை,
அவனே பாவம்,
ஒருத்தியும் திரும்பி
பார்க்க மாடேங்கிறான்னு
நொந்து போய் இருக்கான், நீங்க
வேற..
திடீர்ன்னு ஒரு கார் அவன்
பக்கத்துல வந்து நிக்குது,
அதுலேயிருந்து ஒரு அழகான
பொண்ணு அவன
பார்த்து கைகாட்டி,
‘வண்டியில ஏறுடா நடேசு‘ன்னு
கூப்பிடுது. நம்ம நடேசனுக்கு
‘யாருடா
இது. நம்மளை ஏன்
கூப்பிடுது‘ன்னு ஒரு
சந்தேகம், இருந்தாலும் பொண்ணு,
அதுவும் அழகா வேற
இருக்கு, அப்புறம் எப்படி
போகாம இருக்கிறதுன்னு, கிட்ட
போய் பார்த்தா, “நிர்மலா“.
நிர்மலா யாருடாங்கரீங்களா?
அதாங்க, நடேசன் கூட காலேஜ்ல
படிச்சுதே, அந்த பொண்ணுக்கு
கூட
காலேஜ்ல ஏகப்பட்ட பேரு போட்டி
போட்டாங்கன்னு நடேசன்
ஒருமாதிரி விரக்த்தியா
சொல்லுவானே,
அதே நிர்மலா தான். ‘என்னடா
காலேஜ்ல நம்மளை ஒரு குப்பையா
கூட கண்டுக்காத பொண்ணு, இப்படி
காருல வந்து
கூப்பிடுதே‘ன்னு, நம்ம
பையனுக்கு ஒரு கலக்கம்
இருந்தாலும், இப்பவாது அவ
பக்கம்
உக்கார ஒரு சான்ஸ்
கிடைச்சுதேன்னு டக்குன்னு
காருல ஏறிட்டான்.
காரும் போகுது, நம்ம
நடேசனுக்கு என்ன பேசறதுன்னே
தெரியலை. ‘ ஒரு கப் காபி
சாப்பிடுறயா
என்கூட?’ன்னு நிர்மலா
கேட்டதும், நடேசனுக்கு,
காலேஜ்ல அவ காபி சாப்பிடுற அதே
நேரத்துல
கான்டீன்ல இன்னோரு
மூலையிலகூட இவனுக்கு காபி
சாப்பிட குடுத்த
வைக்காததெல்லாம் நினவுக்கு
வர, அத்தனை டிராபிக்கான டி.பி.
ரோட்டுல பாரதிராஜா படத்துல
வர்ற மாதிரி வெள்ளை டிரஸ்
தேவதையெல்லாம் அப்படியே
‘லாலாலா‘ன்னு பாடிட்டு வர்ற
மாதிரி தோனியிருக்குது, உடனே
தலைய
ஆட்டிட்டான். ‘இப்பப்போனா
கடையெல்லாம் கூட்டமா
இருக்கும், என்னோட வீட்டுக்கு
போயிடலாம்,
அங்கதான் அமைதியா
இருக்கும்‘ன்னு நிர்மலா
சொல்ல்ட்டு நிர்மலா
பாட்டூக்கு வண்டியா ஒட்டுது.
நம்ம பையன் ஒரு புல் பாட்டில
கிங்பிஷர் பக்கத்துலவச்சு
ஓப்பன் பண்ணினாலே உளர
ஆரம்பிச்சுடுவான்
, அவனைப்பார்த்து ஒரு அழகான்
பொண்ணு, அதுவும் ஆட்டோகிராப்
படம் மாதிரி, காளேஜ்ல சைட்
அடிச்ச பொண்ணு, வீட்டுக்கு
போய் தனியா காபி
சாப்பிடாலாம்ன்னு கூப்பிட்டா,
எதோ முதல் முதல்லா
சென்ட்ரல் தியேட்டர் பக்கம்
போற ஸ்கூல் பையன் மாதிரி ஒரே
படபடப்பா தலையாட்டிருக்கான்.
அப்புறம்
அவன் என்ன
செய்யுவான், பேச்சு
வந்தாத்தான?
வீட்டுக்கும் போயிட்டாங்க..’.
என் பெட்ரூம்ல
உக்காந்துக்கலாமே, அங்க தான்
ஏ.சி.யிருக்கு
சில்லுன்னு இதமா
இருக்கும்‘ன்னு நிர்மலா
சொல்ல, இங்க நடேசனுக்கு,
உடம்புல இருக்கிற அத்தனை
ஹார்மோன் சமாச்சரங்களும்,
(வியர்வையும் சேர்த்துதான்)
ஊத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு.
ஏ.சி.
ரூமுக்குள்ள வேர்த்து
விறுவிறுத்து நிக்கிறவனை
பார்த்துட்டு நிர்மலா ‘ஏய்,
ஏன்டா உனக்கு
இப்படி வேர்க்குது, எதுக்கும்
சட்டைய கழட்டிட்டு இப்படி
கட்டில்ல உக்காரு, இதோ நான்
ஒரு
நிமிஷத்துல வந்துர்ரன்‘ன்னு
சொல்லிட்டு வெளிய போயிட்டா,
நடேசனுக்கு அவன் பத்து வருஷம்
முன்னாடி முருகன் தியேட்டர்ல
பார்த்த ‘டியுசன் டீச்சர்‘ல
இருந்து போன வாரம் கனகதாராவுல
பார்த்த ‘தி டூ விமன்‘
வரைக்கும் அந்த நேரத்துல ஏன்
ஞாபகம் வருதுன்னு ஒரே
குழப்பம், அந்த
குழப்பத்துக்கு நடுவாலயும்
நிர்மலா சொன்ன மாதிரி சட்டைய
கழட்டி வச்சுட்டு, (இந்த
இடத்துல,
நடேசனுக்கு பனியன்
போட்டுக்கிற வழக்கம்
இல்லைங்கிற முக்கியமான
விஷயத்தை நாம்
மறந்துரக்கூடாது) கட்டில்ல
உக்காந்திருக்கான்.
இதோ வர்றேன்னு போன நிர்மலா
அஞ்சு நிமிஷமா வரலை, இங்க
நடேசனுக்கு, காலேஜ் டூர்ல
நிர்மலா
போட்டுட்டு வந்த டைட்
ஜீன்ஸும், லோகட் டாப்ஸும்,
திடீர்ன்னு ஞாபகத்துக்கு
வந்து பாடா படுத்துது.
பத்து நிமிஷம் ஆச்சு, நிர்மலா
ரூமுகுள்ள வர்றா…. அவ கூட
ரெண்டு சின்ன குழந்தைக, உள்ள
வந்ததும் அந்த குழந்தைக கிட்ட
சட்டையில்லாம உரிச்ச கோழி
மாதிரி உக்காந்திருக்கிற
நடேசன
காட்டி ‘பாத்துக்கங்க
கண்ணுகளா, நீங்க ஒழுங்கா
ஹார்லிக்ஸ், காம்ப்ளான்,
எல்லாம் குடிக்காட்டி
இப்படித்தான் இந்த மாமா
மாதிரி
ஒல்லியாயிடுவீங்க‘ன்னு
சொல்ல சொல்ல
“அய்யோ! நம்ம நடேசன் ஏங்க
திடீர்ர்ன்னு நெஞ்ச
புடிச்சுட்டு கட்டில்ல
சாயுறான், யாராவது ஒரு
ஹார்லிக்ஸ் இல்லாட்டி
காம்ப்ளான் கலந்துட்டு
வாங்களேன்“